"எமது இலக்கு"

பிரதேசத்தின் நிர்வாகத்தை கட்டியெழுப்புவதன் மூலம் கடமையுணர்வு மற்றும் திறன்மிக்க சேவையை மக்களுக்கு வழங்குவதே.

"எமது நோக்கம்"

அரச கொள்கைகளுக்கு அமைய சேவை வழங்கல், வளங்கள் இணைப்பு மற்றும் ஒன்று கூடலுடனான கLமையுணர்வு, செழில் மிக்க திட்டமிடலுடன் அபிவிருத்தி செயற்பாட்டின் மூலம் பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேன்படுத்தல்.
flag

களுத்துறை மாவட்டத்தில் பதினான்கு(14) பிரதேச செயலகங்களுல் பேருவளை பிரதேச செயலகம் மிகவும் சிறந்த இடத்தை வகிக்கின்றது. சிங்களம், முஸ்லிம், தமிழ் மக்கள் ஒன்றாக வாழ்வதனாலும், பௌத்தம், இஸ்லாம், ஹிந்து மற்றும் கத்தோலிக்க சமயங்களின் ஒன்று கூடலினாலும், தொன்று தொட்டு கடற்றொழில், சுற்றுலாத்துறையை முதன்மையாகக் கொண்ட வியாபார மையமாக இருப்பதுமே இதற்கு காரணமாகும்.

அகலத்தில் 70.04 கிலோ மீற்றர் அதாவது 27.35 பரப்பளவை கொண்ட இப்பிரதேச செயலகம் வடக்குத் திசையாக களுத்துறை பிரதேச செயலகமும் கிழக்குத் திசையாக மதுகம மற்றும் தொடங்கொடை பிரதேச செயலகங்களினாலும் கிழக்குத் திசையாக பெந்தோட்டை கங்கை மேற்கு திசையில் கடல்வரையில் அமைவிடமாக உள்ளது.

முன்னைய காலங்களில் பல்வேறுதொகுதி அமைப்பாளர்கள் கொண்ட இப்பிரதேசத்தின் நிர்வாகம் நகர சபை மற்றும் பிரதேச சபை இரு வகை நிர்வாகத்திற்கு உட்பட்டு அமைக்கப்பட்டுள்ளது.  நகர எல்லை 5.8 கிலோ மீற்றர் என்பதோடு 10 கிராம அலுவலர் பிரிவு பிரிக்கப்பட்டுள்ளது.  பிரதேச சபை எல்லை 65.78 கிலோ மீற்றர் பூராகவும் பரவியிருப்பதோடு அவை 72 கிராம அலுவலர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நிர்வாகம் செய்யப்படும்.  இப்பிரதேச செயலகத்திற்குள் அண்ணளவாக 226 கிராமங்கள் அமைந்திருக்கும்.  இலங்கையின் ஈரவலயத்திற்குட்பட்ட இப்பிரதேச செயலகத்தின் வருடாந்த மழை வீழ்ச்சி 60 – 100 மில்லி லீற்றருக்குட்பட்டு காணப்படும்.  வருட ஆரம்பத்திலே மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறுவதால் சமகால குளிர் காலநிலை ஒன்று காணப்படும்.  பூலோக அமைப்பில் விசேட முக்கியத்துவம் வாய்ந்த மலைத்தொடர்களினாலான நிலப்பரப்பொன்று காணப்படுவதுடன் 2 கிலோ மீற்றரளவில் நாட்டின் உட்பிரவேசிப்பின் போது நிலப்பரப்பின் மத்தியில் இடைக்கிடையே கடல் மட்டத்தில் இருந்து 50 - 100 அடிகளுக்குக்கிடையில் சிறு மலைத்தொடர்களைக் காணலாம்.  இதற்கிடையில் வேரகல மலை, பின்கேன மலை 100 – 200 அடிகளுக்கிடையேயான உயரத்தில் காணப்படும்.  கொடல்ல கெதர மலை, தியலகொட மலை போன்ற மலைத்தொடர்கள் சில இவ்வலயத்தில் காணப்படும்.  வலயத்தின் வனாந்திரங்கள் இல்லாதிருப்பினும் இடைக்கிடையே சிறு காடுகள் காணக்ககூடியதாக இருக்கும்.  இப்பிரதேச செயலகத்தின் பிரதான நீர்வழங்கல் அமைப்பு அமைக்கப்பட்டிருப்பது பிரதேச செயலகத்திற்குத் தெற்குத் திசையில் எல்லையாக அமைந்திருக்கும் அளுத்கம பிரதேசத்தினால் கடலுக்குச் சேரும் பிரதான ஆறாகிய பெந்தோட்டை ஆறு மற்றும் கால்வாய் வழியாக அமைந்திருக்கும்.  இப் பிரதான கால்வாய் வழியினூடாக தும்மல மோதர கால்வாய், களுவா மோதர கால்வாய் பிரதான நிலையாகக் கொள்ளப்படும்.  இக்கால்வாய் அமைப்பின் அண்மையின் இடைக்கிடையே கடோலான அமைப்புகள் காணலாம். இதற்கற்பால் சிறிய கால்வாய் அமைப்பு மற்றும் வாய்க்கால் அமைப்பும் பிரதேசத்தின் நீர்வழ அமைப்பும் பூரணத்துவம் பெற உதவியாக இருந்தது. இவ்வலயத்தின் இடைக்கிடையே சேற்று நிலங்களைக் காணக்கூடியதாக இருக்கும். இதற்கு காரணியாக இருப்பது பெருமளவிலான பிரதேசங்கள் கடல் மட்டத்திற்கு அண்மையில் காணப்படுகின்றமையாகும்.  இவை கடல் மட்டத்தை விட கீழ் மட்டத்தில் அமைந்திருப்பதலால் வடதிய சந்தர்ப்பத்தில் கடல் நீர் இந்த சேற்று நில திசைக்கு வழிந்தோடிச் செல்லும் விதம் காணக்கூடியதாக இருக்கும்.

இங்கே அழுத்துவதன் மூலம் பிரதேச செயலகப் பிரிவின் வரைபடத்தை பதிவிரக்கம் செய்யலாம்

                                     59060c9a0cbeef0acff9a65d

பிரதேச செயலகத்திற்கு பயணிக்கும் விதம்

பேருவளை பிரதேச செயலகம் கொழும்பு – மாத்தறை பிரதான வீதிக்கு அண்மையில் அமைந்துள்ளது.  கொழும்பிலிருந்து வருகை தரும் பொதுமக்களுக்கு பேருவளை நகரத்தை அண்மித்து 100 மீற்றர் முன்னால் செல்லுமிடத்து பேருவளை பிரதேச செயலகத்திற்கு அண்மிக்கலாம்.  காலி மற்றும் மதுகம திசையில் இருந்து வருகை தருவோருக்கு அளுத்கம நகரத்தை தாண்டி களுத்துறை திசைக்கு செல்லுமிடத்து பேருவளை பிரதேச செயலகத்தை காணலாம்.

map oover  

வரலாறு

இதற்கு முன்னர் பிரதேச செயலகம் பிரதேச வருமான வரி அறவிடப்படும் காரியாலயமாக அறிமுகமானது. அய்யுகத்தில் இப்பிரிவு ‘’களுத்துறை தொட்டமுனை தெற்கு’’ எனப் பெயரிடப்பட்டிருந்ததுடன் அக்காலத்தில் திரு.நானாயக்கார அவர்கள் பிரதேச வருமான வரி அறவிடும் உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டு கடமை புரிந்தார் இக் காரியாலயம் அளுத்கமையில் அமைந்திருந்தது. (1967)

1976 இல்  இக் காரியாலயம் அரசாங்க அதிபர் காரியாலயம் என பெயர் பெற்றிருந்த தோடு அது பேருவளையில்  அமைக்கப்பட்டது. அங்கு அரசாங்க அதிபர், உதவி உத்தியோகத்தர், எழுதுவினைஞர் மற்றும் சில வௌிக்கள ஊழியர்களைக் கொண்டதுடன் திரு.அபேவிக்கிரம அவர்கள் அங்கு முதல் அரசாங்க அதிபராக கடமை புரிந்தார்கள்.

1991 இல் அது பிரதேச செயலகமாக மாற்றப்பட்டதுடன் அங்கு முதல் பிரதேச செயலாளராக திரு. ஹபுஆரச்சி அவர்கள் கடமை புரிந்தார்கள். அக்காலப் பகுதியில் அலுவலக உத்தியோகத்தர்கள் வெவ்வேராக பிரிவுகளாக பிரிக்கப்பட்டதுடன் நிர்வாக உத்தியோகத்தர், உதவி பிரதேச செயலாளர் என்ற பதவிகள் அறிமுகப்படுத்தப் பட்டன. பிரிவுகளுக்காக உதவி பிரதேச செயலாளர்களாக இருவர் நியமிக்கப்பட்டார்கள்.

தற்போது இவ் அலுவலகம்  பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர்களுடன் அலுவலக உத்தியோகத்தர்கள் 230 பேரைக் கொண்டதுடன் சட்டபூர்வமாக இரு கட்டிடங்கள் நிர்மானிக்கப்பட்டுள்ளது.

1991ம் ஆண்டு தொடக்கம் சேவையாற்றி பிரதேச செயலாளர்கள்

பெயர   தொடக்கம் வரை
எஸ். ஹபுஆரச்சி அவர்கள் hapuarachchi 1992 2001
ஏ.ஜே. கருணாரத்ன அவர்கள் karunarathne 2001 2002
பர்னாட் வசந்த அவர்கள் Bernard 2002 2006
யூ.டீ.சீ. ஜயலால் அவர்கள் Jayalal 2006 2008
விமல் குணதுங்க அவர்கள் Wimal 2008 2010
தம்மிக ராஜபக்‌ஷ அவர்கள் Dammika 2010 2011
ஜனக ஶ்ரீ சந்திரகுப்த அவர்கள்   2011 2014
கே.ஜீ.டீ. சதுர மல்ராஜ் அவர்கள் chathura 2014 இன்று வரை

News & Events

31
ஜூலை2019
KALAMANA 2019

KALAMANA 2019

I am greatly pleasure to mentioned that...

22
மே2019
The Dharma preaching programme

The Dharma preaching programme

The Dharma preaching programme for wesak festival...

குடியுரிமை சாசனம்

Scroll To Top